சீனாவில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை – டிரம்ப் -!!

சீனாவில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை – டிரம்ப் -!!

ஷி ஜின்பிங் சந்திப்புக்கு அணுஆயுத சூட்கேஸுடன் வந்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின்

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் முத்தரப்பு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக,

ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் அணுஆயுத சூட்கேஸை எடுத்துச் செல்லும் காட்சிகள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

 

உலகின் மூன்று அணுஆயுத வல்லரசு நாடுகளின் தலைவர்களான விளாதிமீர் புட்டின், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் ஆகியோர் அபெக் உச்சிமாநாட்டையொட்டி முதல்முறையாக நேரில் சந்தித்து அணுஆயுதக் குறைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 

இந்நிலையில், மாநாட்டு அரங்கிற்கு அருகே ரஷ்யாவின் அணுஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்ட செகெட் எனப்படும் கறுப்பு நிறப் பெட்டியை அதிகாரி ஒருவர் சுமந்து செல்லும் காணொளியை ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

 

முத்தரப்பு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ரஷ்யா தனது அணுஆயுத வலிமையை வெளிப்படுத்தும் ஒரு அசாதாரண நடவடிக்கையாகவே இதனைப் பகிரங்கப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

இதேவேளை, புதினின் சீனப் பயணத்திற்கு முன்னதாக வியட்நாமின் டா நாங் விமான நிலையத்தில் அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ரஷ்யாவின் இரண்டு Tu-95 மூலோபாய கு*ண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், கடந்த சில நாட்களில் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு அடையாள வலயத்திற்குள் நுழைந்ததும், ஜப்பானின் ஒகினோஷிமா பகுதிக்கு அருகே வான்வெளியை மீறிப் பறந்ததும் அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தமது போ*ர் விமானங்களை அவசரமாகப் பறக்கவிட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தன.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஆசியப் பிராந்தியத்தில் தனது இராணுவ மற்றும் அணுஆயுத பலத்தை ரஷ்யா திட்டமிட்டே பறைசாற்றியுள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin