ரியாதில் ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: சவூதி அரேபியாவின் PIF தலைமையகக் கட்டடம் சேதம்
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள பொது முதலீட்டு நிதியத்தின் (PIF) தலைமையகக் கட்டடம் மீது நவம்பர் 19ஆம் திகதி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிங் அப்துல்லா நிதி மாவட்டத்தில் அமைந்துள்ள குறித்த கட்டடத்தின் 7 மற்றும் 8ஆவது மாடிகளின் ஜன்னல்கள் உடைந்துள்ளதுடன், கட்டடத்தின் வெளிப்புற உலோகக் கட்டமைப்பின் சில பகுதிகளும் வளைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக கிங் அப்துல்லா நிதி மாவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டது.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மூன்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, ஹூதி ஏவுகணையொன்றே குறித்த கட்டடத்தைத் தாக்கியுள்ளது.
எனினும், ஏவுகணை அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து கட்டடம் சேதமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

