சிட்னியில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சம்!!

சிட்னியில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சம்!!

அதிகாலை சோதனையில் சந்தேகநபர் கைது – வெடிபொருள் சதித்திட்டம் குறித்து விசாரணை!

அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தைத் தொடர்ந்து,

இன்று (20 நவம்பர் 2026) அதிகாலை ஆயுதம் ஏந்திய காவற்துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாலை அதிரடிச் சோதனை: மேற்கு சிட்னியில் உள்ள பல வீடுகள் மற்றும் சொத்துக்களில் ஆயுதம் தாங்கிய காவற்துறையினர் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த அதிகாலை சோதனைகளை முன்னெடுத்தனர்.

கைது மற்றும் விசாரணை: இந்தச் சோதனையின் போது வீடுகளைச் சல்லடையிட்ட காவற்துறையினர், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் வெடிபொருட்களைப் பெறுவதற்கான வழிகளை ஆராய்ந்து வந்திருக்கலாம் என புலனாய்வாளர்கள் அஞ்சியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உறுதிப்படுத்தப்படாத விபரங்கள்: தாக்குதலுக்கான குறிப்பிட்ட இலக்கு ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததா அல்லது முழுமையான தாக்குதல் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

மேலதிக விசாரணை: இந்தச் சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் சந்தேகநபர் மீது சுமத்தப்படும் முறையான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் தொடர்கிறது.

அத்துடன் காவற்துறையினரின் துரித தலையீட்டினால் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் அவுஸ்திரேலிய ஊடகத் தகவல்களின்படி, நியூ சவுத் வேல்ஸ் கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் (NSW Joint Counter Terrorism Team) சிட்னியின் பல்வேறு புறநகர்ப் பகுதிகளில் முன்னெடுத்த சோதனைகளின் போது, 35 வயதுடைய நபர் ஒருவர்

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஆவணங்களைத் தயாரித்தமை மற்றும் வன்முறைத் தீவிரவாத உள்ளடக்கங்களை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகனத்தில் பொருத்தக்கூடிய வெடிபொருள் (VBIED) தயாரிப்பது குறித்து அவர் இணையத்தில் ஆராய்ந்ததாகக் காவற்துறையினர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டவுள்ளனர்.

அத்துடன், இந்தச் சோதனைகளின் போது விசாரணைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் துப்பாக்கி வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மேலும் இருவர் (34 மற்றும் 33 வயதுடையவர்கள்) கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,

பொதுமக்களுக்குத் தற்போது உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin