ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான ரகசியத் தகவல்களுக்கு 20 மில்லியன் டொலர் பரிசு! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான முக்கியமான தகவல்களை வழங்குவோருக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர் வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் ‘Rewards for Justice’ திட்டத்தின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள், அதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் உள்ளிட்ட நபர்கள் பற்றிய தகவல்களை அமெரிக்கா கோரியுள்ளது.
மேலும், தகவல் வழங்குவோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவைக்கேற்ப வேறு இடத்திற்கு பாதுகாப்பாகக் குடியமர்த்தும் வசதியும் வழங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தனது அணுசக்தித் திட்டம் அமைதியான நோக்கங்களுக்காகவே முன்னெடுக்கப்படுவதாகத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.
அதேவேளை, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதே தமது நோக்கம் என அமெரிக்கா கூறி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்தப் பரிசு அறிவிப்பு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

