வெடிபொருட்கள் சேமிப்பு வழக்கு: நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை
2018ஆம் ஆண்டு புத்தளம், வண்ணாத்திவில்லு, லக்டோஸ் தோட்டத்தில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைச் சேமித்து வைத்த குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைச் சேமித்து வைத்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த சம்பவம் 2018ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த நிலையில், வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

