கிட்டங்கி பாலம் விவகாரம்: ஆராய்ந்து பதிலளிக்கப் பிரதியமைச்சர் உறுதி!

கிட்டங்கி பாலம் விவகாரம்: ஆராய்ந்து பதிலளிக்கப் பிரதியமைச்சர் உறுதி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கல்முனையிலிருந்து நாவிதன்வெளி பிரதேசத்துக்குச் செல்லும் மக்களின் முக்கிய போக்குவரத்துப் பாதையான கிட்டங்கி பாலத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் 23.10.2026 அன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

கல்முனையிலிருந்து நாவிதன்வெளி பிரதேசத்துக்குச் செல்லும் அம்பாறை மாவட்ட மக்களின் மிக முக்கியமான கிட்டங்கி பாலத்தினை நிர்மாணிப்பதற்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை இப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

இக்கடிதத்தில், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கிட்டங்கி பாலத்தினை நிர்மாணிப்பதற்கான நீரியல் ஆய்வுக்காகத் தனிப்பட்ட நீரியல் நிபுணர்களைக் கோரியுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

ஒரு வருடம் சென்ற நிலையில் இதுவரை கிட்டங்கி பால நிர்மாணப் பணிகள் தொடர்பான விவரங்களை அறிய முடியாத நிலைமை உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள நாவிதன்வெளி பிரதேசம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டதுடன், வறுமைக் கோட்டில் வாழும் மக்கள் உள்ள பிரதேசமாகும்.

எனவே, கிட்டங்கி பால நிர்மாணம் தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க முடியுமா எனக் கேட்டார்.

நீங்கள் குறிப்பிட்ட கிட்டங்கி பாலம் தொடர்பாக உடனடியாகப் பதிலளிக்க முடியாது. அந்தப் பாலம் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நீங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தின் கடிதம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது தொடர்பாகத் தேடிப் பார்க்கின்றேன்.

பெரும்பாலும் ஒப்பந்தம் கையளிக்கும் கட்டமாக இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் பொதுவாக இறுதிக் கட்டத்தை எட்டியிருக்க வேண்டும் எனப் பிரதியமைச்சர் பதிலளித்தார்.

Recommended For You

About the Author: admin