பிரான்ஸில் வாழும் இலங்கையர்களுக்கு நற்செய்தி!

பிரான்ஸில் வாழும் இலங்கையர்களுக்கு நற்செய்தி! – தூதரகத்தின் சிறப்பு நடமாடும் சேவை அறிவிப்பு!

பிரான்ஸில் வசிக்கும் இலங்கையர்களின் வசதிக்காகப் பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக விசேட ஆலோசனையும் நடமாடும் சேவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்தச் சேவை இடம்பெறவுள்ளது.

 

நீஸ், Monaco, Cannes மற்றும் பிரான்ஸ் வாழ் மக்கள் பயனடையும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Beausolil பகுதியில் அமைந்துள்ள ‘Salle le Petit Rene’ என்னுமிடத்தில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

 

இதன்போது புதிய கடவுச்சீட்டு விண்ணப்பங்கள், விசா சேவைகள் மற்றும் இரட்டைப் குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

மேலும், பிரான்ஸில் பிறந்த குழந்தைகளுக்கான பிறப்பு மற்றும் குடியுரிமைச் சான்றிதழ் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

பொலிஸ் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் மற்றும் அவசரப் பயண ஆவணங்கள் வழங்கும் சேவைகளும் அன்று இடம்பெறவுள்ளன.

 

மேலதிக விபரங்களுக்கு +33 1 55 73 31 31 என்ற இலக்கத்தையோ அல்லது consular.paris@mfa.gov.lk என்ற மின்னஞ்சலையோ தொடர்பு கொள்ளலாம்.

Recommended For You

About the Author: admin