இறக்காமம் மண்ணுக்குப் பெருமை சேர்த்த விமானப் பொறியியலாளர் சரிவுதீன் சராப் அஹமட்!

இறக்காமம் மண்ணுக்குப் பெருமை சேர்த்த விமானப் பொறியியலாளர் சரிவுதீன் சராப் அஹமட்!

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இறக்காமம் கிராமத்திலிருந்து முதன்முதலாக விமானப்படை அதிகாரியாக (Air Force Officer) இணைந்து, அப்பகுதிக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் சரிவுதீன் சராப் அஹமட்.

 

விமானப்படையில் அதிகாரியாக இணைந்தது மாத்திரமல்லாமல் விமானப் பொறியியல் துறையில் (Aeronautical Engineering) உயர்கல்வியையும் வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

 

ரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் (KDU) விமானப் பொறியியல் பட்டப்படிப்பை திறம்பட நிறைவு செய்து, அண்மையில் இடம்பெற்ற கௌரவ பட்டமளிப்பு விழாவில் தனது பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

 

இறக்காமம் றோயல் ஜூனியர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், இறக்காமம் அல்-அஸ்ரப் தேசிய பாடசாலையில் இடைநிலைக் கல்வியையும், கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் உயர்கல்வியையும் கற்ற சரிவுதீன் சராப் அஹமட், தனது விடாமுயற்சியினாலும் கல்வித்துறையில் காட்டிய ஈடுபாட்டினாலும் இவர் பெற்ற இத்தகைய வெற்றி, இறக்காமம் மண்ணின் இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் உந்துசக்தியாகவும் அமைந்துள்ளது.

 

திருகோணமலை சீனக்குடா விமானப்படை தளத்தில் நேற்று முன்தினம் மிகச் சிறப்பாக இடம்பெற்ற கடமையைப் பொறுப்பாக்கும் நிகழ்விலேயே சரிவுதீன் சராப் அஹமட் அதிகாரியாக அதிகார பூர்வமாக இணைக்கப்பட்டார்.

 

விமானப்படைத் தளபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

 

இந்நிகழ்வில் தனது அன்புப் பெற்றோர்களான சரிவுதீன் மற்றும் யூ.எல்.சுல்பிக்கா அவர்களுடனும், சகோதரர்களுடனும் கலந்துகொண்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

 

எனது மனைவியின் மூன்றாவது சகோதரி யூ.எல்.சுல்பிக்காவின் மூத்த புதல்வர்தான் சரிவுதீன் சராப் அஹமட் ஆவார்.

 

பெற்றோருக்கும், தான் கல்வி கற்ற பாடசாலைகளுக்கும், குறிப்பாக இறக்காமம் கிராமத்திற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை ஈட்டித் தந்துள்ள பொறியியலாளர் சரிவுதீன் சராப் அஹமட் எதிர்காலத்தில் இன்னும் பல உயர் பதவிகளையும் சாதனைகளையும் அடைய வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

Recommended For You

About the Author: admin