பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு இரண்டாவது முறையாகவும் மக்கள் விருது!
பொதுமக்களுக்கு ஆற்றிய மகத்தான மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு (Police Media Division) இரண்டாவது முறையாகவும் ‘மக்கள் விருது’ (Peoples Award) வென்று சாதனை படைத்துள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் காலத்திற்கு ஏற்ற வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமை, சரியான மற்றும் நம்பகமான தகவல்களை எவ்வித தாமதமுமின்றி உடனுக்குடன் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தமை ஆகியவையே இந்த உயரிய அங்கீகாரத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
மேலும், சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் சிறந்த தொடர்பைப் பேணி வருகின்றமை, அரசு நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்பாடலை முறைப்படுத்தியமை மற்றும் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ச்சியாகப் புதுப்பித்து விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுத்தமை போன்ற சிறப்பான பங்களிப்புகளும் இதன்போது விசேடமாகப் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

