கொழும்பில் பிக்குமாரின் சத்தியாக்கிரகப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது!

கொழும்பில் பிக்குமாரின் சத்தியாக்கிரகப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது.

கடந்த 16ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டத்தின்போது, தற்காலிகக் கூடாரம் அமைக்க முயன்ற வேளையில் பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

 

இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் பதற்றம் ஏற்பட்டதுடன், பலாங்கொட கஸ்ஸப தேரர் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பொலிஸார் தாக்கியதால் தேரருக்குக் காயம் ஏற்பட்டதாக பிக்குகள் குற்றஞ்சாட்டிய நிலையில், அவர் கால் தவறி விழுந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

எனினும், மேலதிக சிகிச்சை தேவையில்லை எனக் கூறி, தேரர் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாக மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin