இலங்கையில் 30,000 புதிய ஆசிரியர்களை இணைக்கத் திட்டம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

இலங்கையில் 30,000 புதிய ஆசிரியர்களை இணைக்கத் திட்டம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

இலங்கையின் கல்வி அமைப்பில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் சுமார் 30,000 புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

 

தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் இன்று (18) உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இதன்படி, 17,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், பல்கலைக்கழகக் கட்டமைப்பில் 2,000 விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதற்கிடையில், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin