இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு: காரணம் கண்டறிய விசாரணை ஆரம்பம்!
இலங்கையில் கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி ஏற்பட்ட நாடளாவிய மின்வெட்டு தொடர்பில், அதன் துல்லியமான காரணத்தையும் சம்பவங்களின் தொடர்ச்சியையும் கண்டறிய தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் பிரிவு (NSO) உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையமொன்றின் அலகு திடீரெனத் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் சரிவு ஏற்பட்டதாக NSO தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் தற்காலிகமாக தேசிய மின் கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 810 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும், சாதகமான மழைவீழ்ச்சியால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், மின்சாரத் தேவையும் ஓரளவு குறைந்துள்ளதாக NSO குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மின்சார விநியோகத்தைச் சீராகப் பேணுவதற்கும், நுகர்வோருக்கான தடைகளை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்தப் பிரிவு உறுதியளித்துள்ளது.

