யேமனில் மீண்டும் பதற்றம் ஏடன் விமான நிலையத்திற்கு அருகில் இரு ஏவுகணைத் தாக்குதல்கள்
யேமனில் மீண்டும் தீவிரமடைந்துள்ள உள்நாட்டுப் போர் மோதல்களுக்கு மத்தியில், ஏடன் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களை ஹூதி கிளர்ச்சியாளர்களே நடத்தியதாக, யேமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஜனாதிபதி மாளிகையைக் குறிவைத்து நடத்தப்பட்டு ஒரு நாள் கடந்த நிலையில், இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
விமானம் ஒன்று புறப்படுவதற்குத் தயாராக இருந்தபோது, அதிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் ஏவுகணைகள் விழுந்ததாக யேமனின் தகவல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

