சர்வதேச சதுரங்க அரங்கில் சாதனை படைக்கும் யாழ்ப்பாணச் சிறுமி கஜிஷனா தர்ஷன்!

சர்வதேச சதுரங்க அரங்கில் சாதனை படைக்கும் யாழ்ப்பாணச் சிறுமி கஜிஷனா தர்ஷன்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க வீராங்கனையான AFM கஜிஷனா தர்ஷன், தேசிய மற்றும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி இலங்கைக்குப் பெருமை சேர்த்து வருகிறார்.

2025ஆம் ஆண்டு ஜோர்ஜியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண சதுரங்கப் போட்டியில் எட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றமை அவரது முக்கியமான சர்வதேசச் சாதனைகளில் ஒன்றாகும்.

மேலும், 2024ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியப் பாடசாலைகள் சதுரங்கப் போட்டியிலும் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

அத்துடன், 2025ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கான சதுரங்கப் போட்டியிலும் அவர் பங்கேற்று சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளார்.

தேசிய மட்டத்திலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுள்ள கஜிஷனா, இளம் வயதிலேயே சதுரங்கத் துறையில் தனது திறமையை நிலைநாட்டி வருகிறார்.

இவரது சாதனைப் பயணம் யாழ்ப்பாணத்துக்கும் இலங்கையின் சதுரங்கத் துறைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இளம் வயதிலேயே சர்வதேச அரங்கில் தடம் பதித்துவரும் கஜிஷனா தர்ஷன், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்!

Recommended For You

About the Author: admin