முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து கஞ்சி வழங்கியவர் கைது

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி வழங்கிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை திருகோணமலை சம்பூர் சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்த போது அதனை சம்பூர் பொலிஸார் தடுக்க முற்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே,... Read more »

இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திருகோணமலையில்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா.மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து திருகோணமலை இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை இன்று சனிக்கிழமை திறந்து வைத்தனர். திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல் தீவு பாலத்திற்கு அருகாமையில்... Read more »
Ad Widget

பாரதிபுரம் படுகொலை: பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு மரண தண்டனை

தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாகவிருந்த 08 தமிழர்கள் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தனர். இதன்போது குறித்த பகுதியில் சட்டவிரோத ஒன்றுகூடலில்... Read more »

புதிய முயற்சியை ஆரம்பித்துள்ள திருமலை விவசாயிகள்

யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் மேற்கொள்வதற்கான முயற்சியில் திருகோணமலை, திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ஈடுபட்டு வருகின்றனர். திரியாய் விவசாயிகளின் பாரிய முயற்சியின் காரணமாக 1300க்கு மேற்பட்ட மண் மூடைகள் 15 அடி உயரத்திற்கு அடுக்கப்பட்டு ஆற்று நீரை வயல்களுக்கு திருப்பியுள்ளனர்.... Read more »

யாப்பு விதிகள் மீறப்பட்டதை சிறிதரன் தரப்பு ஒப்புக் கொண்டது

தமிழரசு கட்சியின் யாப்பு விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளதை ஏற்றுக்கொள்வதாக எதிர்த்தரப்பினர் மன்றில் தெரிவித்துள்ளனர் என்று வழக்காளிகள் சார்பில் மன்றில் வாதாடிய சட்டத்தரணிகள் “ஒருவன்” செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை வழக்காளிகளுக்கு நிவாரணம் வழங்க எதிராளிகள் இணங்குவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் யாப்பு விதிகளுக்கு அமைய தீர்மானங்கள்... Read more »

தாமரை பூ பறிக்க சென்ற இளைஞன் பலி..!

திருகோணமலை, பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு இன்று (28) காலை... Read more »

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இடைக்கால தடை

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது. இந்த மனு இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது வாதத்தை அவதானித்த நீதவான் நீதிமன்றம் மாநாட்டை நடத்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்சியின் யாப்பு விதிகளுக்கு... Read more »

செயலாளர் பதவியால் ஏற்பட்ட மோதல்: சுமந்திரனின் சதி அம்பலமானது

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய மற்றும் பொதுக் குழு கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், பெரும் சர்ச்சைகளும் சண்டைகளும் ஏற்பட்டிருந்தன. இதனை பலரும் விமர்சித்திருந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது என்றத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்று காலை 10.30 மணிக்கு கட்சியின்... Read more »

பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் குழப்பம்: புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பு

இலங்கை தமிரசுக் கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவுசெய்தற்கான வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் இடம்பெற உள்ளது. பொதுச் செயலாளரை தெரிவுசெய்வதற்காக கட்சியின் பொது சபைக் கூட்டம் இன்று காலை முதல் இடம்பெற்றுவரும் நிலையில், திருகோணமலையை சேர்ந்த குகதாசனை அந்தப் பதவிக்கு நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. எனினும்... Read more »

தமிழரசு கட்சி கூட்டத்தில் சம்பந்தர் அணிக்கும் குகதாசன் அணிக்கும் இடையே அடிபுடி

தமிழரசு கட்சி கூட்டத்தில் சம்பந்தர் அணிக்கும் குகதாசன் அணிக்கும் இடையே அடிபுடி   Read more »