கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டன..!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்காடு பகுதியில் இன்று (04) கண்டெடுக்கப்பட்ட ஒருதொகை வெடிபொருட்கள் இன்று பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டன.
விவசாயி ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இவற்றில் 107 கைக்குண்டுகள் (Hand Grenades)
1780 துப்பாக்கி ரவைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை பல வருடங்கள் முற்பட்டவை எனவும் வெள்ளத்தின் காரணமாக மேற்பகுதியில் தென்பட்டதாகவும் தெரிய வருகின்றது.


