மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார களத்திலிருந்து கண்காணிப்பு..!
மகாவலி கங்கை பெருக்கெடுப்பால், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக் குட்பட்ட சோலைவெட்டுவான், மயிலப்பன்சேனை, காரைவெட்டுவான் ஆகிய கிராமங்களில் தரைவழிப்பாதை இன்று (29.11.2025) முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், அங்கிருக்கும் 78 குடும்பங்களையும் வெளியேற்றும் நடவடிக்கை இன்று பகல் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக கடற்படையினரின் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
கிண்ணியா பிரதேச செயலாளர்
எம். எச். எம். கனியின் நெறிப்படுத்தலின் கீழ், நிர்கதியான குடும்பங்கள் இயந்திர படகு மற்றும் வள்ளங்கள் மூலம் கொண்டுவரப்பட்டன.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார களத்துக்கு விஜயம் செய்து, மக்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றார்.


