உக்ரைன் போர்: இரசாயன ஆயுதங்களை கையில் எடுப்பாரா புடின்? 

உக்ரைன் போர்: இரசாயன ஆயுதங்களை கையில் எடுப்பாரா புடின்?

உக்ரைன் (Ukraine) உடனான போர் முடிவில்லாமல் நீடித்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக தி டைம்ஸ் (The Times) எச்சரித்துள்ளது.

உக்ரைன் (Ukraine) ராணுவத்தின் தகவல்படி, ரஷ்யப் படைகள் இதுவரை 9,000-க்கும் அதிகமான முறை இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளன. கடந்த வருடம் மட்டும் 6,540 முறை இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குளோரோபிக்ரின் (chloropicrin) என்ற நச்சு வாயுவையும் ரஷ்யப் படைகள் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைனில் (Ukraine) ரஷ்யா பயன்படுத்திய இரசாயன ஆயுதங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் அஞ்சுகின்றன. இதுகுறித்து தி டைம்ஸ் (The Times) கூறுகையில், “உக்ரைன் போர் நீண்டகாலமாக நீடித்தால், புடின் (Putin) மிகவும் ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தத் தூண்டப்படலாம். புடின் (Putin) அணு ஆயுதங்களைப் பற்றி அடிக்கடி பேசினாலும், இரசாயன ஆயுதங்கள் குறித்து மௌனம் காக்கிறார்” என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் (Russia) இரசாயன ஆயுதத் திட்டம் இன்னும் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உக்ரைன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. 2020-ல் அலெக்ஸி நவால்னிக்கு (Alexei Navalny) விஷம் கொடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, ரஷ்யா (Russia) நோவிசோக் (Novichok) என்ற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் இரசாயன ஆயுதத்தை தொடர்ந்து தயாரித்து வருவது தெரியவந்தது.

இதுகுறித்து பிரிட்டன் (Britain) இராணுவ அதிகாரி ஹமிஷ் டி பிரெட்டன்-கார்டன் (Hamish de Bretton-Gordon) கூறுகையில், “ரஷ்யாவின் (Russia) இரசாயன ஆயுதத் திட்டம் இன்னும் செயல்பாட்டில் உள்ளது என்று கருதுவது நியாயமானது. நோவிசோக் (Novichok) பரவலாகப் பயன்படுத்தப்பட்டால், அது பேரழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார்.

மேலும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது ரஷ்யாவுக்கு (Russia) பாதகமான நடவடிக்கையாக இருக்கும் என்று பிரிட்டன் கூட்டுப் படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சர் ரிச்சர்ட் பாரன்ஸ் (General Sir Richard Barrons) கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அது போர் குற்றமாக கருதப்படும். மேலும், இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது. காற்று வீசும் திசை போன்ற காரணிகள் ஆயுதத்தை பயன்படுத்துபவர்களுக்கே எதிராக திரும்பக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் (Ukraine) இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்யா (Russia) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், ரஷ்யப் படைகள் 10,000-க்கும் மேற்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) குற்றம் சாட்டியது.

உக்ரேனியப் படைகளை வெளியேற்றுவதற்காக ரஷ்யப் படைகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியதாகவும் உக்ரைன் (Ukraine) குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது உக்ரைன் (Ukraine) போர் தீவிரமடைந்துள்ள நிலையில், புடின் (Putin) இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவாரா? என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

செய்தித் தகவல் மூலம் – தி டைம்ஸ்.

Recommended For You

About the Author: admin