அதிர்ச்சிச் செய்தி: தேசிய மக்கள் சக்தியின் இளவயது பிரமுகர் காலமானார்!
கோமரங்கடவளை பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரமுகருமான ரங்க தர்மதாச காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மரணமடைந்தபோது அவருக்கு வயது 34 ஆகும்.
மரணம் குறித்தச் சந்தேகம்:
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட இவர், இதய அடைப்பு (Heart Attack) காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது திடீர் மறைவு அப்பகுதி மக்களிடமும், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

