திருகோணமலை – கொழும்பு இடையே நாளை முதல் புதிய காலை நேர ரயில் சேவை!
திருகோணமலை மற்றும் கொழும்பு கோட்டை இடையிலான நேரடி புகையிரத சேவை நாளை முதல் (20.12.2025) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த புதிய சேவையின் கால அட்டவணை விபரங்கள் பின்வருமாறு:
பயண நேரங்கள்: திருகோணமலை – கொழும்பு (வண்டி எண்: 7084): காலை 07:00 மணிக்கு திருகோணமலையிலிருந்து புறப்படும்.
கொழும்பு கோட்டை – திருகோணமலை (வண்டி எண்: 7083): காலை 06:00 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும்.
குறிப்பு: பொதுமக்கள் நீண்டகாலமாக இரவு நேர ரயில் சேவையை எதிர்பார்த்துக் காத்திருந்த போதிலும், தற்போது முதற்கட்டமாக காலை நேர சேவை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ரயில் போக்குவரத்து குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

