இராவணன் மற்றும் கோணேசப்பெருமானுடைய வரலாற்றுடன் தொடர்புபட்ட கன்னியா வெந்நீரூற்று தனது வரலாற்றை மட்டுமல்ல தமிழர்களது வரலாற்றையும் தொலைத்துக் கொண்டிருக்கிறது.
பல ஆண்டுகாலமாக இருந்த பிள்ளையார் கோவில் இல்லை சிவன்கோவிலிலும் வழிபாட்டுக்குத் தடை
தொல்லியல் தொடக்கூடாது என்று கூறுவதொல்லாம் தமிழருக்குத்தானா?
இந்நிலையில் தொல்லியலுக்குரிய பகுதியாக இருக்கின்ற பகுதிகளில் தற்போது வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
தொல்லியலுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள, திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்காடப்பட்ட பகுதியில் என்ன வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன என மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

