தமிழர் பகுதியில் புது மாப்பிள்ளை ஒருவருக்கு நேர்ந்த பெரும் துயரம்..!

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய திருமணம் முடித்து சில மாதங்களான இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

திருகோணமலை – ஜமாலியாவில் அமைந்துள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து, கிண்ணியாவிலுள்ள தனது மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, இராணுவ வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: admin