அரசியல் பேச முடியாது: கவலையில் ரஞ்சன் ராமநாயக்க

ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கு அமைவாக தான் அரசியல் பேச முடியாத நிலையில் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கவலை தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர்கள் சிலருடன் நட்பு ரீதியாக உரையாடும் போது அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் கடந்த 2021 ஆம் ஆண்டு... Read more »

போக்குவரத்து அமைச்சரை சாமர்த்தியமாக ஏமாற்றிய அம்பாறை அதிகாரிகள்

இலங்கை போக்குவரத்துச் சபையின் அம்பாறை டிப்போ அதிகாரிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அல்வா கொடுத்த சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளது. பழுதடைந்த பேரூந்துகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட 400 பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கை... Read more »
Ad Widget

தமிழரசுக் கட்சியை அழிக்கும் சதித் திட்டம்: பதவி ஆசைக்கு இடமில்லை சம்பந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை திருகோணமலையில் நடத்தும் முயற்சிக்கு எதிராக திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்கள் நேற்று வியாழக்கிழமை இடைக்காலக் கட்டாணை வழங்கித் தடை விதித்தது. கடந்த மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற பொதுக் குழுக்... Read more »

சரத் பொன்சேகா நீக்கப்படுவாரா?: அல்லது விலகுவாரா?

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகாவை வெளியேற்றுவது குறித்த தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சரத் பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி... Read more »

முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோரினார் ஞானசாரதேரர்

இலங்கைதீவில் வாழும் முஸ்லிம் சமூகத்திடம் ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக தேரர் அறிவித்துள்ளார். பொதுப்பல சேனவின் பொதுச் செயலாளரான ஞானசாரதேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான இனவாத கருத்துக்களை... Read more »

சஜித்துடன் இணையும் சு.கவின் முக்கியஸ்தர்கள்: அதிருப்தியை வெளியிட்ட மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேர் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணையவுள்ளதாக எதிர்க்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. கொழும்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களே இவ்வாறு இணைய... Read more »

தொழிற்சங்க நடவடிக்கையால் பயனடையும் அரசாங்கம்

வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களைத் தவிர வைத்தியசாலை அமைப்பை சிதைக்கும் திறன் எவருக்குமில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்துள்ளார். சுகாதார பணியாளர்களின் சேவை இனி வைத்தியசாலைகளுக்கு தேவையில்லையென தாம் பல முறை கூறி வருவதாக தெரிவித்த... Read more »

மாகாண பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்ய வர்த்தமானி

இலங்கைத்தீவில் 1987ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்குவதற்கான 22ஆவது திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, தனிநபர் பிரேரணையாக 22ஆவது திருத்தத்தை கடந்த... Read more »

சுங்க அதிகாரிகள் சட்டப்படி வேலை போராட்டம்

சுங்க அதிகாரிகள் இன்று காலை முதல் சட்டப்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்ஜீவ தெரிவித்துள்ளார். நாட்டிற்கு பிரதானமான வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனமாக சுங்கத் திணைக்களம்... Read more »

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர்... Read more »