ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கு அமைவாக தான் அரசியல் பேச முடியாத நிலையில் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கவலை தெரிவித்துள்ளார்
ஊடகவியலாளர்கள் சிலருடன் நட்பு ரீதியாக உரையாடும் போது அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரஞ்சன் ராமநாயக்க குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் ரஞ்சன் ராமநாயக்க கடந்தாண்டு தற்போதைய ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஏழு வருடங்களுக்கு தனது குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டிருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
ஏழு வருடங்களுக்கு எனது குடியுரிமையை இழந்துள்ளேன். ஜனாதிபதியின் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்புக்கு அமைவாக என்னால் அரசியல் பேச முடியாது.
அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. இருந்தும் என்னை சிறையில் இருந்து விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்த நிபந்தனைகளுக்கு இன்றுவரை கட்டுப்பட்டே நடக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

