செயலிழந்து கிடக்கும் அரசாங்க தொலைபேசி இணைப்புகள்

அரச நிறுவனங்கள் என்பன பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் அவர்களுக்கான சேவைகளை வழங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டவை ஆகும். எனினும், கடைமையை சரிவர செய்யத் தவறிய , செயலற்ற தன்மையுடன் செயற்பட்டு வரும் அரச சேவைகளைப் பற்றி ஆராயப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலங்கை தீவில் அரசாங்க சேவைகளை... Read more »

இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளாத கச்சைதீவு அந்தோனியார் திருவிழா!

தமிழக மீனவர்கள் இம்முறை கச்சைதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை. இலங்கைக் கடற்படையினர் தம்மைக் கைது செய்வதாகவும் தமது மீன்பிடிப் படகுகளை சேதப்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியே இம் முறை திருவிழாவில் பங்குகொள்ளவில்லை. சுமார் 3500 பேர் திருவிழாவில் பங்குபற்றியதாக யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்... Read more »
Ad Widget

சர்வதேச சட்டங்களை ஆராயாமல் கட்சி மோதல்களில் ஈடுபடும் தமிழ்த் தரப்பு

இஸ்ரேல் – பலஸ்தீன பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதன் சட்டபூர்வத் தன்மை பற்றி ஆராய்ந்து சட்டப் பொருள் கோடல்களைப் பரிந்துரைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிய சட்ட விளக்கம் பற்றிய விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது. சென்ற செய்வாய்க்கிழமை அமெரிக்காவும்... Read more »

சீன ஆய்வுக் கப்பல் அச்சத்தில் இந்தியா, இலங்கை வழங்கிய உறுதிப்பாடு

மாலைத்தீவு கடற்பரப்பில் சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக தனது பிரதேசத்தை எந்தவொரு மூன்றாம் நாடும் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புதுதில்லியில் நடைபெற்று வரும் மாநாடு ஒன்றில் பேசிய, வெளிநாட்டு... Read more »

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள உயர்வு திரும்ப அறவிடப்படும்

இலங்கை மத்திய வங்கியில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் திரும்ப அறவிடப்படும் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின்பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிடும்... Read more »

இலங்கையில் அடுத்த ஜனாதிபதி யார்?

தென்னிலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. புதிய கூட்டணிகளுக்கான வேலைகளும் காய்நகர்த்தல்களும் வெட்டுக்குத்துக்களும் அரங்கேறிவருகின்றன. ஜனாதிபதி ஆசனத்தைப் பிடிப்பதற்கு மும்முனை போட்டி இடம்பெற்றுவருகின்றது. அனுரகுமார திஸாநாயக்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தந்திரங்களை வகுத்துவருகின்றன.... Read more »

இலங்கையின் கடல்சார் பாதுகாப்புக்கு அமெரிக்கா ஆதரவு

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு... Read more »

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு: சுமந்திரன், சாணக்கியன் மீது கட்சியினர் கடும் அதிருப்தி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக் கை வாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள்... Read more »

இலங்கையில் இரவு பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்

இரவு நேர பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 வீதம் வரை அதிகரிக்க முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்காக சுற்றுலாப் பயணிகளை கவரும் அதிக கவனம் செலுத்தும் இடங்கள் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் திருத்தம்... Read more »

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியில் பிளவு : தொடர்ந்து இணையும் முன்னாள் இராணுவத் தளபதிகள்

முன்னாள் இராணுவத் தளபதியும், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார். இலங்கை இராணுவத்தின் 54 இராணுவத் தளபதியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே இன்று (23) எதிர்கட்சித் தலைவர் சஜித்... Read more »