தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம்

உலகில் குறைவான மன உளைச்சலுக்கு உள்ளான நாடுகளில் இலங்கை தரவரிசையில் இரண்டாவது நிலையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபின் லைப் (Sapien Labs) இன் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையின்படி இலங்கையில் மன உளைச்சலுக்கு உள்ளாவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது.... Read more »

இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

இலங்கையில், 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். தற்போதைய சுகாதார அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு இதுவரை தீர்வு வழங்கவில்லை என அவர் மேலும்... Read more »
Ad Widget

நாட்டை கடனில் இருந்து காப்பாற்றுவோம் -ஜனாதிபதி

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை எனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைத்து ஐக்கிய தேசியக்... Read more »

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதிக்கு ஆதரவா?

எதிர்வரும் தேசியத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம் கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தக் கட்சிகளின் உள்ளக வட்டாரங்களை கோடிட்டு தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... Read more »

அரச நிறுவன குத்தகைக்கு வாகன செலவு 256 கோடி ரூபா

அரச நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் எடுக்கப்பட்ட வாகனங்களுக்கு வருடாந்தம் செலுத்தப்படும் தொகை இருநூற்று ஐம்பத்தாறு கோடி இருபது இலட்சம் ரூபா (2562 மில்லியன் ரூபா) எனத் தெரிவிக்கப்படுகிறது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்... Read more »

ரணிலுக்கு ஜனாதிபதித் தேர்தல் மகிந்த தரப்பு பொதுத்தேர்தல் வேண்டும் என்கிறார் அனுர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த விரும்பினாலும், ராஜபக்சக்கள் பொதுத் தேர்தலையே முதலில் நடத்த வேண்டுமென விரும்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கூட்டணியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற... Read more »

IMF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்: ஜனாதிபதியின் அழைப்பை ஏற்ற கூட்டமைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைய தினம் (மார்ச் 11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்... Read more »

இலங்கை நாடாளுமன்றத்தில் சாந்தனுக்கு அஞ்சலி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்திருந்தார். சாந்தனுக்காக இலங்கை... Read more »

நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அசிட் வீச்சுத் தாக்குதல்

இரத்தினபுரியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மூவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் வைத்தே இன்று அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகன... Read more »