IMF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்: ஜனாதிபதியின் அழைப்பை ஏற்ற கூட்டமைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) ஏற்றுக்கொண்டுள்ளது.

இன்றைய தினம் (மார்ச் 11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பங்கேற்கவுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த கலந்துரையாடலில் அவர் பங்கேற்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கட்சியுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னரே தான் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin