அரச நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் எடுக்கப்பட்ட வாகனங்களுக்கு வருடாந்தம் செலுத்தப்படும் தொகை இருநூற்று ஐம்பத்தாறு கோடி இருபது இலட்சம் ரூபா (2562 மில்லியன் ரூபா) எனத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் கோகிலா குணவர்தன கேட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குத்தகைக்கு எடுக்கப்பட்ட நாலாயிரத்து நானூற்று இருபத்தேழு வாகனங்களுக்கு இந்தத் தொகை செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அரச நிறுவனங்களின் அறுபத்து ஒன்பதாயிரத்து நூற்றி இருபத்தொரு வாகனங்கள் இயங்கும் நிலையில் வாகனங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களில் பதினேழாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து நான்கு வாகனங்கள் அரை அரச நிறுவனங்களுக்கு சொந்தமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் முதல் திகக்குள் புதுப்பிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தத் தரவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.