இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று நேற்று வியாழக்கிழமை அறிவித்த பின்னரும் அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெயிலி மிரர்... Read more »
தொழில் நிமித்தமாக மலேசியாவுக்கு சென்ற நிலையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்த மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளைஞரின் உடலானது நேற்றிரவு 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. மஸ்கெலியா, மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயதுடைய இளைஞன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக... Read more »
இந்திய தேர்தலில் அமெரிக்காக தலையிட்டு இந்தியாவை நிலைகுலையச் செய்ய முயற்சிக்கிறது என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் வேளையில், மதச்சுதந்திர விதிமுறை மீறல் குற்றத்தை சுமத்தி இந்தியாவை அமெரிக்கா நிலைகுலைய செய்ய... Read more »
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்மபூஷன் விருதினை நேற்று அவரின் மனைவி பிரேமலதா பெற்று கொண்டார். மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த... Read more »
இந்தியா, விருதுநகர் மாவட்டத்தின் செங்கமலப்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 10 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 30க்கும் அதிகமான பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன. இந்நிலையில் வழமைப்போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும்... Read more »
நாடளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகாரபூர்வ வெளியீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்த நிலையில் இலங்கைத்தீவின் அரசியல் அரங்கம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ஆம்... Read more »
நீர் இல்லாமல் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்தவொரு உயிரினத்தாலும் வாழ முடியாது. நீரின் தேவை அதிகரித்து வருவதால் பூமியிலிருந்து அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான கால அளவிலேயே கிழக்கு நோக்கி 80 சென்டிமீட்டர் நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.... Read more »
சட்டவிரோதமான வழிகளில் ரஷ்யா – உக்ரைன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை முப்படை வீரர்களை அனுப்பி ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு விசேட பிரிவொன்றை அமைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, பல்வேறு வழிகளில் ரஷ்யா-உக்ரைன் போருக்குப் புறப்பட்ட முப்படைகளின் ஓய்வுபெற்ற... Read more »
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் 28 வருடங்களின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை (10)நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.... Read more »
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனதா விமுக்தி பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் நேற்று பிற்பகல் (19) இடம்பெற்றது. இதன்போது இலங்கையின்... Read more »

