இந்திய தேர்தலில் தலையீடு – அமெரிக்கா மறுப்பு

இந்திய தேர்தலில் அமெரிக்காக தலையிட்டு இந்தியாவை நிலைகுலையச் செய்ய முயற்சிக்கிறது என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் வேளையில், மதச்சுதந்திர விதிமுறை மீறல் குற்றத்தை சுமத்தி இந்தியாவை அமெரிக்கா நிலைகுலைய செய்ய முயற்சிக்கிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜகரோவா குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து மறுப்பு தெரிவித்த, அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்,“கண்டிப்பாக இல்லை. நாங்கள் இந்திய மக்களவைத் தேர்தலில் மட்டுமல்ல. உலகின் எந்த நாட்டுத் தேர்தல் விடயங்களிலும் தலையிடுவதில்லை. இந்தியாவின் தேர்தல் குறித்து இந்திய மக்களே தீர்மானிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

காலிஸ்தான் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலையில் இந்தியர்களுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா கூறியது முற்றிலும் தவறானது. மேலும் அதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அமெரிக்கா வழங்கவில்லை என்றும் ரஷ்யா கூறியது.

“நிரூபிக்கப்படும் வரையில் அவை குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே. இந்த விடயம் நீதிமன்றத்தில் இருப்பதால் நான் எதுவும் பேசமுடியாது” என மில்லர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin