கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ‘ பதிவு செய்திகள் ‘ செய்தியாளர் தெரிவித்தார்.
மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக அநாமதேய தகவல் ஒன்று கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

