நீர் இல்லாமல் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்தவொரு உயிரினத்தாலும் வாழ முடியாது. நீரின் தேவை அதிகரித்து வருவதால் பூமியிலிருந்து அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான கால அளவிலேயே கிழக்கு நோக்கி 80 சென்டிமீட்டர் நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
1993 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 2150 ஜிகா தொன் நிலத்தடி நீரை மனிதர்கள் வெளியேற்றியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு அமெரிக்கா, வடமேற்கு இந்தியா போன்ற நாடுகள் நிலத்தடி நீரின் பெரும்பகுதியை பயன்படுத்தியுள்ளது.
இவ்வாறு நிலத்தடி நீர் குறைவது பூமி சுழற்சி துருவங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த தாக்கத்தின் காரணமாக பூமி கிழக்கு நோக்கி நகர்வது என்பது எதிர்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.