இன்று (26) பிற்பகல் முதல் தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று நண்பகல் வரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிலையாகக் காணப்பட்ட போதிலும், பிற்பகலுக்குப் பின்னர் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாய் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,163 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக ஓரளவுக்கு நிலையாக இருந்த தங்க விலை, இன்று திடீரென அதிகரித்துள்ளமை நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அவதானத்தை ஏற்படுத்தியுள்ளது.

