மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு குவியும் விருதுகள்

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்மபூஷன் விருதினை நேற்று அவரின் மனைவி பிரேமலதா பெற்று கொண்டார்.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது.

இந்த விருதுகளுக்கு, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, எனப் பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களைப் பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு ஜனவரியில் அறிவித்தது.

இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று விஜயகாந்துக்கு விருது வழங்கப்படவுள்ளது. அவர் சார்பில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விருதினை பெற்றார்.

இதேவேளை, அண்மையில் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிலையில் பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin