சஜித்துடன் இணையும் சு.கவின் முக்கியஸ்தர்கள்: அதிருப்தியை வெளியிட்ட மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேர் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணையவுள்ளதாக எதிர்க்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. கொழும்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களே இவ்வாறு இணைய... Read more »

ஐ.நா நோக்கி பிரித்தானியாவில் ஆரம்பமான போராட்ட பேரணி

தமிழ் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழீழத்தை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப் போராட்டப் பேரணி பிரித்தானியாவில் ஆரம்பமாகியது. குறித்த போராட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், ஆதரவினை... Read more »
Ad Widget

தொழிற்சங்க நடவடிக்கையால் பயனடையும் அரசாங்கம்

வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களைத் தவிர வைத்தியசாலை அமைப்பை சிதைக்கும் திறன் எவருக்குமில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்துள்ளார். சுகாதார பணியாளர்களின் சேவை இனி வைத்தியசாலைகளுக்கு தேவையில்லையென தாம் பல முறை கூறி வருவதாக தெரிவித்த... Read more »

மறைந்து போகும் மெக்ஸிகோ வளைகுடா

உலகில் காணப்படும் பனிப்பாறைகள் விரைவாக உருகுவதால், மெக்ஸிகோ வளைகுடா நீரோடை மறைந்து போகக்கூடும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதிகரித்து வரும் வாயு வெளியேற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, பூமியில் பனிப்பாறைகள் அதிகளவு உருகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தாவிட்டால், 2025ம் ஆண்டுக்குள், வளைகுடா நீரோடை... Read more »

மாகாண பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்ய வர்த்தமானி

இலங்கைத்தீவில் 1987ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்குவதற்கான 22ஆவது திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, தனிநபர் பிரேரணையாக 22ஆவது திருத்தத்தை கடந்த... Read more »

எல் செல்வடோர்: நாட்டின் நிலைமையை மாற்றிய இளம் ஜனாதிபதி

எல் செல்வடோர் என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. ஒரு காலத்தில் இந்த நாடு குற்றங்கள், ஊழல், கொலைகளுக்கு முகவரியாக விளங்கியது. எனினும் தற்போது அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. ஜனாதிபதி Nayib Armando Bukele Ortez... Read more »

சாந்தனின் வருகை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில் தான் நிலைமை உள்ளது. சாந்தனுடைய தாயார், சகோதரி, சகோதரன்... Read more »

சுங்க அதிகாரிகள் சட்டப்படி வேலை போராட்டம்

சுங்க அதிகாரிகள் இன்று காலை முதல் சட்டப்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்ஜீவ தெரிவித்துள்ளார். நாட்டிற்கு பிரதானமான வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனமாக சுங்கத் திணைக்களம்... Read more »

பிரபல பாடகி தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

மலிகா ராஜ்புத் என்ற பெயரால் அறியப்பட்ட பாடகியும் நடிகையுமான விஜய் லட்சுமி, உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். நேற்று முன்தினம் மாலை அவரது அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய... Read more »

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர்... Read more »