எல் செல்வடோர்: நாட்டின் நிலைமையை மாற்றிய இளம் ஜனாதிபதி

எல் செல்வடோர் என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. ஒரு காலத்தில் இந்த நாடு குற்றங்கள், ஊழல், கொலைகளுக்கு முகவரியாக விளங்கியது. எனினும் தற்போது அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது.

ஜனாதிபதி Nayib Armando Bukele Ortez ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னல் நாட்டில் குற்றங்கள் மற்றும் கொலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

‘கூல் சர்வாதிகாரி’

Nayib Armando எல் செல்வடோரில் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவிக்கு வந்தார்.

நாட்டில் ஜனநாயகம் சீர்குலைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, Nayib Armando அவற்றைச் சரிசெய்வார் என்ற நம்பிக்கையில் வாக்காளர்கள் அவரது கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

நாட்டில் அதிகரித்து வரும் கொலைகளை கட்டுப்படுத்த புதிய ஜனாதிபதி எடுத் கடுமையான நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எல் செல்வடோர் தொழிலாளர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். Nayib Armando தற்போது சர்வதேச ரீதியில் ‘கூல் சர்வாதிகாரி’ என அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Nayib Armando 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து எல் செல்வடோரின் சட்டம் ஒழுங்கு நிலைமையில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் வெகுவாக குறைந்துள்ளது.

அண்மையில் நடந்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றதால், அவரது ‘New Ideas Party’ கட்சியின் தொழிலாளர்கள் வெற்றிக் குதூகலத்துடன் பேரணிகளை நடத்தினர். செல்வடோரின் மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஒன்றுக்கூடி வெற்றியை கொண்டாடினர்.

42 வயதான தலைவர் Nayib Armando, இந்த வெற்றியை தனது நிர்வாகத்திற்கான ‘சர்வஜன வாக்கெடுப்பு’ என விவரித்துள்ளார். நாட்டின் பாராளுமன்றத்தின் மொத்தம் 60 இடங்களைக் கைப்பற்றிய Nayib Armandoவின் New Ideas Party கட்சி மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய உள்ளது.

இந்தத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் Nayib Armandoவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதுடன் அவர் செல்வடோர் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக மாறியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சூழலில் Nayib Armando தனது மனைவியுடன் தேசிய அரண்மனையில் இருந்து ஆதரவாளர்களிடம் உரையாற்றினார்.

எல் செல்வடோர் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக இருந்து பாதுகாப்பான நாடாக மாறியது. அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என Nayib Armando குறிப்பிட்டுள்ளார்.

ஒரே வாரத்தில் 80 பேரை கொலை வன்முறை குழு

எல் செல்வடோரில் கொலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.Mara Salvatrucha என்ற குழுவின் (MS-13) உறுப்பினர்கள் நாட்டில் பல கொலைகளை செய்த மிக மோசமான வன்முறை குழு, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே வாரத்தில் 80 பேரை இந்த குழுவினர் கொன்றனர்.

இதனையடுத்து இந்த குழுவுடன் தொடர்புடைய 75 ஆயிரம் பேரை Nayib Armandoவின் அரசாங்கம் கைது செய்தது.

இதனை தொடர்ந்து பல குற்றவாளிகள் கைது செய்த அரசாங்கம், எல் செல்வடோரின் குற்றவாளிகளின் செயற்பாடுகளை முடக்கியது.

இந்த நடவடிக்கையின் விளைவாக, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கொலைகளின் எண்ணிக்கையானது 60 வீதமாக குறைந்துள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக Nayib Armando அரசாங்கம் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கி வருகிறது. 2023 ஆம் ஆண்டில் நாட்டின் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

70 வீதமாக குறைந்து போன கொலைகளின் எண்ணிக்கை

பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, எல் செல்வடோரில் கொலை சம்பவங்கள் சத வீதமானது 2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்திற்கு 2.4 வீதமாக 70 வீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.

லத்தீன் அமெரிக்காவின் ஏனைய பெரும்பாலான நாடுகளை விட இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு

2019 ஆம் ஆண்டு எல் செல்வடோர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற Nayib Armand, நாட்டில் குற்றம், ஊழல் மற்றும் சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்தார்.

ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டோக் போன்ற சமூக ஊடக தளங்களை அவர் தனது ஆதரவாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், விமர்சகர்களுக்கு பதிலளிக்கவும் திறம்பட பயன்படுத்தியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் Nayib Armandoவின் ஆட்சியில் எல் செல்வடோர் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகவும் பாதுகாப்பான நாடாக தற்போது மாறியுள்ளது.

Recommended For You

About the Author: admin