தொழில்நுட்ப கோளாறு குறைந்தது 50 பேர் காயம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக LATAM ஏர்லைன்ஸ் நடுவானில் ‘வலுவான இயக்கத்தை உருவாக்கியதால்’ விமானத்தில் பயணித்த குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திங்களன்று (11) அவுஸ்திரேலியாவின் சிட்டினியில் இருந்து நியூஸிலாந்தின் ஆக்லாந்து நோக்கி பயணித்த போயிங் 787-9 ரக விமானமே... Read more »

போர்த்துக்கலில் மத்திய வலதுசாரி கூட்டணி வெற்றி

போர்த்துக்கல் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மத்திய வலதுசாரி கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தலில் இந்த வெற்றி பதிவாகியுள்ளது. இதனை மத்திய வலதுசாரி கூட்டணியின் தலைவர் லூஸ் மோன்டென்கிரோ(Luis Montenegro) உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை தீவிர வலதுசாரி கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாது எனவும்,... Read more »
Ad Widget

திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம்

திமுக கூட்டணியில் தாம் இணைந்ததிற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் விளக்கமளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியபோது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். மேலும் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களையும்... Read more »

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் வகுக்கும் வியூகம்

நாடாளுமன்றத்தைக் கலைத்துக் காபந்து அரசாங்கத்தை (Caretaker Government) அமைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமான சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெற்றுவருவதாக அறியமுடிகிறது. நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென மகிந்த ராஜபக்ச தரப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் ரணில்... Read more »

முன்னாள் போராளிக்கு அழைப்பாணை

முன்னாள் போராளி ஒருவருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா தோணிக்கல் பகுதியில் வசிக்கும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) என்பவரையே கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் திகதி காலை 9 மணிக்கு... Read more »

ராஜபக்ச குடும்பத்தால் சாதிக்க முடியாது முஜிபுர்

மொட்டுக்கட்சியை மையப்படுத்திய ராஜபக்ச தரப்பினால் எதையும் சாதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ராஜபக்ச தரப்பில் இருந்து எவா் வேட்பாளராகப் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது என்றும் தமது தரப்பு வேட்பாளர் வெற்றிபெறுவாரென நாமல் ராஜபக்ச... Read more »

உணவில்லாத பொருளாதாரத்தால் பயனில்லை-அனுரகுமார

தேசிய மக்கள் சக்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது இறுதியானது அல்ல எனவும் நாட்டை கட்டியெழுப்பும் ஆரம்பம் எனவும் அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகமையில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »

தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம்

உலகில் குறைவான மன உளைச்சலுக்கு உள்ளான நாடுகளில் இலங்கை தரவரிசையில் இரண்டாவது நிலையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபின் லைப் (Sapien Labs) இன் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையின்படி இலங்கையில் மன உளைச்சலுக்கு உள்ளாவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது.... Read more »

மோடியின் தமிழக பயணத்தின் பின்னணி

இந்தியாவின் அனைத்து மாநிலங்கிலும் பார்க்க தமிழகம் பொருளாதாரத்தின் மையமாக காணப்படுகின்றது. வளம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் தமிழகம் செல்வாக்குடையதாக காணப்படுகின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்ஙை (Xi Jinping) தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அந்தளவு தூரத்திற்கு தமிழகம்... Read more »

இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

இலங்கையில், 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். தற்போதைய சுகாதார அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு இதுவரை தீர்வு வழங்கவில்லை என அவர் மேலும்... Read more »