போர்த்துக்கல் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மத்திய வலதுசாரி கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தலில் இந்த வெற்றி பதிவாகியுள்ளது.
இதனை மத்திய வலதுசாரி கூட்டணியின் தலைவர் லூஸ் மோன்டென்கிரோ(Luis Montenegro) உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை தீவிர வலதுசாரி கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாது எனவும், இருந்த போதிலும் அவர்கள் பேச்சுக்களை நிராகதித்துவிட்டதாகவும் லூஸ் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர வலதுசாரிக் கட்சியினர் 230 பேர் கொண்ட சபையில் 48 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளனர். முன்பிருந்ததைவிட நான்கு மடங்கு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஐரோப்பாவில் வலதுசாரி கொள்கை வீழ்ச்சியடையும் போக்கு போர்த்துக்கல் தேர்தல் முடிவுகள் மூலம் புலப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 50 வருடத்திற்கு பின்னர் பாசிச கொள்கையிலிருந்து ஐரோப்பா ஜனநாயகத்திற்கு திரும்பியிருந்தது. எதிர்வரும் தேர்தல்களில் தீவிர வலதுசாரிகள் வெற்றிபெறக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது.