மொட்டுக்கட்சியை மையப்படுத்திய ராஜபக்ச தரப்பினால் எதையும் சாதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச தரப்பில் இருந்து எவா் வேட்பாளராகப் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது என்றும் தமது தரப்பு வேட்பாளர் வெற்றிபெறுவாரென நாமல் ராஜபக்ச எதிர்ப்பார்ப்பது வேடிக்கை என்றும் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை முதலில் வைக்க தீர்மானித்தாலும் நாமல் உள்ளிட்ட மொட்டுக் கட்சியினர் நாடாளுமன்ற தேர்தலையே விரும்புகின்றனர்.
ரணிலுக்கு மக்கள் மத்தியில் போதுமான ஆதரவு இல்லாத காரணத்தினால் அவர், ஜனாதிபதி தேர்தலை நடத்தத் தீர்மானித்துள்ளார்.
ஆனாலும் மொட்டுக்கட்சியினர் ஜனாதிபதி தேர்தலை கோருவதற்கான காரணம், குறைந்தபட்சம் 15 உறுப்பினர்களையாவது நாடாளுமன்றிற்கு கொண்டுவருவதே.
ரணிலுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுத்தால் நிச்சயம் தோல்வி என்பதும் அவர்களுக்குப் புரியும்.
எவ்வாறயினும், ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தினால் யார் வேட்பாளராக வந்தாலும் மொட்டுக் கட்சியினர் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்பது அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது