ஆசிய நாடுகளுக்கான மசகு எண்ணெய் விலையைக் குறைத்தது சவுதி அராம்கோ!

ஆசிய நாடுகளுக்கான மசகு எண்ணெய் விலையைக் குறைத்தது சவுதி அராம்கோ!

6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியால் வணிகர்கள் அதிர்ச்சி!

உலகிலேயே அதிக அளவில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனமான சவுதி அராம்கோ (Saudi Aramco), ஆசிய சந்தைகளுக்கான தனது மசகு எண்ணெய் விற்பனை விலையைக் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைத்துள்ளது.

 

நவம்பர் மாதத்திற்கான ‘அரப் லைட்’ (Arab Light) ரக கச்சா எண்ணெயின் உத்தியோகபூர்வ விற்பனை விலையை, பீப்பாய் ஒன்றுக்கு 3 அமெரிக்க டொலர் அளவுக்கு சவுதி அராம்கோ குறைத்துள்ளது.

 

இந்த அதிரடி மாற்றத்தால், பிராந்திய அளவுகோல் விலையை விட (Regional Benchmark) பீப்பாய்க்கு 5 அமெரிக்க டொலர் தள்ளுபடியில் இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

சவுதி அரேபியா ஆசிய சந்தைகளுக்கான விலையை பீப்பாய்க்கு 5 அமெரிக்க டொலர் வரை உயர்த்தும் என்றே எண்ணெய் சந்தை வணிகர்களும் வர்த்தக ஆய்வாளர்களும் எதிர்பார்த்திருந்தனர்.

 

இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக விலை கணிசமாகக் குறைக்கப்பட்டிருப்பது சர்வதேச வர்த்தகர்களிடையே பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரங்களின்படி, கப்பல் சரக்குக் கட்டண உயர்வு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கவும்,

 

ஆசிய சந்தையில் தனது பங்கைத் தக்கவைத்துக் கொள்ளவுமே சவுதி அராம்கோ இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அதேவேளையில், ஐரோப்பிய நாடுகளுக்கான மசகு எண்ணெய் விலையை இந்நிறுவனம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin