ரஷ்யாவில் அணு ஆயுதங்களைச் சுமந்துசெல்லும் குண்டுவீச்சு விமானம் விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் அணு ஆயுதங்களைச் சுமந்துசெல்லும் குண்டுவீச்சு விமானம் விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியத்தில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய இராணுவ குண்டுவீச்சு விமானம் ஒன்று

விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

சீனாவின் எல்லைக்கு அருகிலுள்ள அமுர் (Amur) பிராந்தியத்தின் ஆள் நடமாட்டமற்ற காட்டுப் பகுதியில்

 

வழக்கமான பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த Tu-95 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது விமானத்தில் எவ்வித வெடிபொருட்களோ ஆயுதங்களோ இருக்கவில்லை என ரஷ்ய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தில் பயணித்த பணியாளர்களில் ஒருவர் உயிர் தப்பியுள்ள நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில்,

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய விமானப்படையின் நீண்ட தூர அணுசக்தித் தாக்குதல் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கும் Tu-95 ரக விமானங்கள்,

பல தசாப்தங்களாக அந்நாட்டின் வான்பாதுகாப்புப் பிரிவில் பயன்பாட்டில் உள்ள முக்கிய போர் விமானங்களாகும்.

Recommended For You

About the Author: admin