அமெரிக்காவில் பாரிய கூட்டு அதிரடி நடவடிக்கை!!
189 காணாமல் போன சிறுவர்கள் மீட்பு – 12,000-க்கும் மேற்பட்டோர் கைது!
அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தின் மெம்பிஸ் (Memphis) பகுதியில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட பாரிய கூட்டு நடவடிக்கைகளின்
ஊடாக, காணாமல் போயிருந்த 189 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதுடன், 12,000-க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறைக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறார் மீதான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘Memphis Safe Task Force’ நடவடிக்கைகளின் மூலமாகவே இந்த பாரிய வெற்றி எட்டப்பட்டுள்ளது.
நீண்டகாலமாகக் காணாமல் போயிருந்த மற்றும் பல்வேறு இக்கட்டான சூழல்களில் சிக்கியிருந்த 189 சிறுவர்கள் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுப் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சட்ட அமுலாக்கல் பிரிவினர் மேற்கொண்ட தொடர் சுற்றிவளைப்புகளில் கொலை, சட்டவிரோத ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், பாலியல் குற்றங்கள் மற்றும்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் உட்பட 12,000-க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய 2,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோதத் துப்பாக்கிகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில், டென்னசி மாநிலத்தில்
அதிகரித்துவந்த வன்முறைக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக கூட்டாட்சி (Federal), மாநில மற்றும் உள்ளூர் காவற்துறை அமைப்புகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு முகவரகங்களை
ஒன்றிணைத்து ‘Memphis Safe Task Force’ கடந்த ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இக்கூட்டுப் படையினரின் ஓராண்டு காலத் தீவிர நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ தரவுகளிலேயே இந்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன

