சக்தி வாய்ந்த ஆயுத தொகுப்பை இஸ்ரேலுக்கு வழங்க டிரம் நிர்வாகம் திட்டம்!!

சக்தி வாய்ந்த ஆயுத தொகுப்பை இஸ்ரேலுக்கு வழங்க டிரம் நிர்வாகம் திட்டம்!!

இஸ்ரேலுக்கு 2,000 பவுண்டு (900 கிலோ) எடையுள்ள பல்லாயிரக்கணக்கான சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் ஊடுருவித் தாக்கும்

வெடிபொருட்களை உள்ளடக்கிய 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பை வழங்க அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ (The Washington Post) செய்தி வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் MK-84 ரக வெடிகுண்டுகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாலஸ்தீன மக்களுக்குப் பாதுகாப்பான இடங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கூட இந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டு பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதால் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அமெரிக்காவில் பைடன் மற்றும் டிரம்ப் நிர்வாகங்களின் கீழ் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட 2,000 பவுண்டு வெடிகுண்டுகளின் அளவை விட இந்த புதிய ஆயுதத் தொகுப்பு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin