சவூதி அரேபியா எண்ணெய் குழாய் மீது தாக்குதல்

சவூதி அரேபியா எண்ணெய் குழாய் மீது தாக்குதல் – உலக அளவில் 4% உலக எண்ணெய் விநியோகம் பாதிப்பு!

ட்ரோன் தாக்குதல் காரணமாக சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் (East-West Pipeline) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4% வரை இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், செங்கடலில் உள்ள யான்பு (Yanbu) துறைமுகம் வழியே சவூதி தினமும் 40 லட்சம் பேரல் எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வந்தது.

தற்போது குழாய் சேவை முடங்கியதால், யான்புவில் இன்னும் 5 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்வதற்கான எண்ணெய் இருப்பு உள்ளது.

இப்பிரச்சனை தொடர்ந்தால் உலக அளவில் எரிபொருள் விலை மேலும் அதிகரித்து, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin