45 ஆண்டுகளுக்குப் பின் ஹிங்குராக்கொட ரயில் நிலையம் புனரமைப்பு
நாடு தழுவிய அளவில் 100 ரயில் நிலையங்களை அரச-தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொட ரயில் நிலைய புனரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளன.
45 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பெரிய அபிவிருத்தியையும் காணாத இந்த ரயில் நிலையம், பயணிகள் போக்குவரத்துக்கும் விவசாய விளைபொருட்களை கொண்டு செல்வதற்கும் பெரும் பக்கபலமாக அமையும்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு ‘CIC ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் 40 மில்லியன் ரூபாயை வழங்கவுள்ளது.
ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், நவீன தொழில்நுட்ப அறிமுகம் மற்றும் பேருந்து-ரயில் சேவைகளை ஒருங்கிணைத்து திறமையான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

