“20-க்கு தேவைப்பட்ட பொதுவாக்கெடுப்பு 22-க்கு ஏன் இல்லை?”

“20-க்கு தேவைப்பட்ட பொதுவாக்கெடுப்பு 22-க்கு ஏன் இல்லை?” – ஜனாதிபதியிடம் சஜித் பிரேமதாச கேள்வி!

எதிர்க்கட்சியில் இருந்தபோது 20-வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுவாக்கெடுப்பு அவசியம் என வாதிட்ட அனுரகுமார திசாநாயக்க, இன்று ஜனாதிபதியாக 22-வது திருத்தத்தைக் கொண்டுவரும் போது அதைத் தவிர்ப்பது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ரத்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், அதிகாரத்திற்கு வந்தவுடன் அரசியல் சுயலாபத்திற்காகக் கொள்கைகளை மாற்றுவதாகக் குற்றம் சாட்டினார்.

 

எரிபொருள் விலை குறைப்பு, மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றத் தவறிவிட்டதாக அவர் சாடினார்.

 

மேலும், அரசின் இரு ஆண்டு நிறைவு விழா ஆட்சியாளர்களின் ஆடம்பரத்தைக் காட்டுவதாக விமர்சித்த அவர், மக்களின் உண்மையான மனநிலையை அறிய உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துமாறு அரசுக்கு சவால் விடுத்தார்.

Recommended For You

About the Author: admin