ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பாதைகள் திடீர் மாற்றம்! காரணம் என்ன?
இந்தோனேசியாவின் அனக் க்ரக்கடோவா எரிமலை திடீரென சீற்றமடைந்ததால், ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து இலங்கை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களின் பாதைகள் அவசரமாக மாற்றப்பட்டுள்ளன.
எரிமலைச் சாம்பல் வான்பரப்பில் பரவுவதால், எஞ்சின்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜகார்த்தா விமான நிலைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், பல சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
விமானப் பாதைகள் மாற்றத்தால் பயண நேரம் அதிகரிப்பதுடன், கூடுதல் செலவுகளும் ஏற்படும்.
இருப்பினும் பயணிகளின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமை சீராகும் வரை பயணிகள் தங்கள் பயண விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

