இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்திற்குச் சென்று நியாயம் கேட்க முயன்ற ஈழத்தமிழ் பெண் 

இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்திற்குச் சென்று நியாயம் கேட்க முயன்ற ஈழத்தமிழ் பெண்

ஒருவருக்கு, வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

கனடாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி தமிழ் இளைஞர், யுவதிகளிடம் போலியான ஆவணங்களைக் காட்டி ஐம்பது லட்சத்திற்கும்

 

அதிகமான பணத்தைக் சுருட்டிய இந்த மோசடி கும்பல், துபாயில் இருந்து இயங்கி வந்துள்ளது.

 

விசாக்களில் சந்தேகம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பிலுள்ள கனடா தூதரகத்தில் விசாரித்தபோதே அவை போலியானவை என்பது அம்பலமாகியுள்ளது.

 

இதைக் தட்டிக் கேட்டு நியாயம் கேட்ட பெண்ணுக்கு, துபாயில் உள்ள பிரதான மோசடிக்காரர் வாட்ஸ்அப் குரல்பதிவு மூலம் “நீ இருக்கும் இடம் எனக்குத் தெரியும்,

 

அதிகமாகத் துடிக்க வேண்டாம்” என்று பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பு முறைப்பாடு செய்துள்ள நிலையில், தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

தொடர்ந்து செய்திகளைப் பெறவும், நம்மோடு இணைந்திருக்கவும்:

Recommended For You

About the Author: admin