ஒலிபெருக்கி பயன்பாடு குறித்த உயர் நீதிமன்ற உத்தரவு

ஒலிபெருக்கி பயன்பாடு குறித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் அறிவிப்பு!

இலங்கையில் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஒலிபெருக்கிகள் மற்றும் பிற ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10.00 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 1.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணி வரையிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும், இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரையிலான காலத்தில் ஒலி பயன்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது.

மத மற்றும் விசேட நிகழ்வுகளுக்குச் சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படும்.

அனுமதி பெற்றிருந்தாலும், ஒலியானது குறிப்பிட்ட வளாகத்திற்குள் மட்டுமே கேட்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin