ஜெர்மனியில் அதிர்ச்சி! ரயில் நிலையத்தில் பிரிட்டிஷ் பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் கைது
ஜெர்மனியின் தெற்கு பகுதியில் உள்ள ரோசன்ஹைம் (Rosenheim) ரயில் நிலையத்தில், 31 வயதுடைய பிரிட்டிஷ் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் அவர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 😔
🚔 சம்பவம் நடந்த உடனேயே சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் என்ன? இருவருக்கும் முன்பே அறிமுகம் இருந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
🇬🇧 உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
🙏 உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

